அமெரிக்க உச்சநீதிமன்றம் முந்தைய பரவலான வரி நடைமுறையை முடக்கிய நிலையில், டிரம்ப் நிர்வாகம் வியாழக்கிழமை இரவு இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் உட்பட 60 வர்த்தக பங்காளிகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்துள்ளது.
கட்டாய உழைப்பு தடுப்பு விதிமுறைகளின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள இந்த புதிய வரிகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.
ஆரம்பத்தில் இந்தியாவுக்கு 12.5% வரை வரி விதிக்க பரிசீலிக்கப்பட்ட போதிலும், தொழிலாளர் விதிமுறைகள் குறித்து வாஷிங்டனுடன் இந்தியா நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து, அது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ள அல்லது அது தொடர்பான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்ட நாடுகளுக்கு 10% குறைந்தபட்ச வரி வரம்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டாய உழைப்பு விவகாரம்: இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய வரியை அறிவித்தது டிரம்ப் நிர்வாகம்
