சேவைத் துறை மேம்பாட்டுக்கான முன்மொழிவுகள்

சேவைத் துறையின் மேம்பாடுகள் மற்றும் தர உயர்வுக்கான முன்மொழிவுகளை சீன அரசவை ஏப்ரல் 21ம் நாள் வெளியிட்டது. முழு தொழில் சங்கிலியில் பலவீனமாக உள்ள உற்பத்தி சார்ந்த சேவைத் தொழில்களை வலுப்படுத்துவது, வாழ்க்கை சார்ந்த சேவைத் தொழில்களின் முக்கிய பகுதிகளை மேம்படுத்துவது முதலியவை குறித்து இம்முன்மொழிவுகளில் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. 2030ம் ஆண்டு வரை, சேவை துறையின் மொத்த மதிப்பு, 100 டிரில்லியன் யுவானை எட்ட வேண்டும். மேலதிக சீனச் சேவை தொடர்பான தொழில் சின்னங்களை வளர்க்க வேண்டும். சேவை துறையின் உலகப் போட்டியாற்றல் மற்றும் செல்வாக்கு தெள்ளத்தெளிவாக வலுவடைய வேண்டும். மக்களின் மன நிறைவு தொடர்ந்து உயர்ந்து வர வேண்டும் என்று இம்முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேவைத் துறை, நாட்டுப் பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாகும். அதன் வளர்ச்சி நிலை, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடும் ஒரு முக்கிய சின்னமாக விளங்குகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author