திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

Estimated read time 0 min read

திருவண்ணாமலையில் சித்திரை வசந்த உற்சவ விழாவையொட்டி அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மன் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை வசந்த உற்சவ விழா வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முதல் நாளில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் வெட்டிவேர் பல்லக்கில் எழுந்தருளினர். தொடர்ந்து, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெற்றது. பல்லக்கில் எழுந்தருளிய அண்ணாமலையார் சமேத உண்ணாமுலையம்மன் மகிழ மரத்தை பத்து முறை சுற்றி வந்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

You May Also Like

More From Author