செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி: ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்!  

Estimated read time 0 min read

முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில், சுமார் 45,000 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் புகாரைச் சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்களில் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“வழக்கை ஒரு சுதந்திரமான விசாரணை அமைப்பிற்கு மாற்ற வேண்டுமா என்பதை முடிவு செய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளின் தகுதி குறித்த முடிவு அல்ல. இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் யாருக்கும் எதிரானவையாகக் கருதப்படக் கூடாது” என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author