‘கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பிக் கொடுங்கள்!’:மன்னர் சார்லஸிடம் கோரிக்கை வைக்கப்போவதாக மம்தானி தெரிவித்தார்  

Estimated read time 0 min read

பிரிட்டன் மன்னர் சார்லஸ் தற்போது அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி அவரிடம் வரலாற்றுச் சிறப்புமிக்க கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்த போவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானியின் இந்தத் திடீர் கோரிக்கை, சர்வதேச அளவில் காலனித்துவ காலச் சின்னங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மம்தானி பேசினார்.
அப்போது, “மன்னரைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பித் தருமாறு நான் நிச்சயமாக அவரை ஊக்குவிப்பேன்” என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author