தவெகவிடம் இறங்கி வந்த அதிமுக…! “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர்கிறதா”…?

Estimated read time 1 min read

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இரண்டாம் இடத்திலும், ஆளுங்கட்சியான திமுக மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் அளித்துள்ள பேட்டி அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பது குறித்து தவெக தலைவர் விஜய் தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும்

என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழக அரசியலில் ஒரு புதிய ‘கூட்டணி ஆட்சி’ மலருமா என்ற எதிர்பார்ப்பு

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாலைக்குள் தமிழகத்தின் புதிய முதல்வர் யார் என்பதில் தெளிவான முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு திராவிடக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி புதிய கட்சி ஒன்று முன்னிலை பெறுவது தமிழக அரசியலில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author