இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக தளி ராமச்சந்திரன் அவர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் பொறுப்பேற்ற கையோடு, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்கும் மிக முக்கியமான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஆதரவுக் கடிதம் விரைவில் ஆளுநரிடம் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-விற்கு, இடதுசாரி கட்சிகளின் இந்த அதிகாரப்பூர்வ ஆதரவு மிகப்பெரிய பலத்தை அளித்துள்ளது.
தளி ராமச்சந்திரன் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த ஆதரவு, சட்டமன்றத்தில் விஜய்யின் பலத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ள இந்தக் கடிதம், தவெக ஆட்சியமைப்பதற்கான சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கும் முதல் படியாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் விஜய்யின் ‘முதல்வர்’ கனவு நனவாவதற்கான அனைத்து முட்டுக்கட்டைகளும் ஒவ்வொன்றாக விலகி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
