CPI, CPI (M) ஆதரவை தொடர்ந்து விசிக அறிவிப்பு; விரைவில் கடிதம் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு  

Estimated read time 0 min read

தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நீடிக்கும் இழுபறிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் சூழல் எட்டியுள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
எனினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற எண்ணை எட்ட முடியாத நிலையில், 5 எம்எல்ஏக்களை பெற்றுள்ள காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவுக்கு ஆதரவளித்தது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு பெறுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இது மெஜாரிட்டிக்கு போதுமான எண்ணிக்கையில் இல்லாத நிலையில், இன்று நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக அறிவித்து கடிதம் கொடுத்துள்ளது.

You May Also Like

More From Author