சிபிஐ-யை தொடர்ந்து சிபிஎம்மும் தவெகவிற்கு ஆதரவு!

Estimated read time 0 min read

சிபிஎம் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் தவெகவிற்கு ஆதரவு கொடுக்க சிபிஎம் செயற்குழுவில் தீர்மானம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியாகின. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில், அவரிடத்தில் பெரும்பான்மைக்கான அந்த மேஜிக் நம்பர் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி கூட்டணியில், இணைந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

இது மட்டும் இல்லாமல், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனக்கு ஆதரவு அளிக்கும்படி, விசிக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தார். இந்த மூன்று கட்சிகளிடம் மொத்தம் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இப்படி இருக்கையில், தமிழக வெற்றி கழகத்தை ஆதரிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இதனை தொடர்ந்து (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) சிபிஎம் மதசார்பின்மை மற்றும் பாஜகவுடன் கூட்டணிக்கூடாது என்ற பிரதான நிபந்தனைகளின் அடிப்படையில் தவெகவிற்கு ஆதரவு வழங்கியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author