கேரளா தேர்தல் முடிவுகள் : காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

Estimated read time 1 min read

கேரளா : ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்கு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 43 இடங்களில் அமைக்கப்பட்ட 140 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.காலை 6.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம்கள் திறக்கப்பட்டன.

தேர்தல் ஆணைய அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.முதல் கட்டமாக தபால் வாக்குகள் (மொத்த வாக்குகளில் 1.36%) எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பப் போக்குகளின்படி, காங்கிரஸ் தலைமையிலான யுனைட்டட் டெமாக்ரட்டிக் ஃப்ரண்ட் (UDF) முன்னிலை வகிப்பதாகத் தெரிகிறது.10:00 மணி நிலவரம் (தற்போதைய முன்னிலை):

ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), எதிர்க்கட்சியான யுனைட்டட் டெமாக்ரட்டிக் ஃப்ரண்ட் (UDF), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆகியவை இடையே கடும் போட்டி நிலவிய இந்தத் தேர்தலின் முடிவுகள் மதியத்துக்குள் தெளிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளா முழுவதும் தேர்தல் பரபரப்பு உச்சத்தில் உள்ள நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மாநில அரசியலை எவ்வாறு மாற்றும் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author