இபிஎஸ் முதல்வராக பதவியேற்பார் – தம்பிதுரை..!!

Estimated read time 1 min read

சென்னையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இறைவன் அருளால் உரிய காலத்தில் அதிமுக ஆட்சி அமையும். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார். எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.

எங்களது கட்சியின் பொதுச்செயலாளர், மக்களுடைய தலைவர் அவர் நல்லது நாட்டுக்கு தருவார் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்தார்.

அதிமுக-திமுக பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, ”அது எல்லாம் அவர்கள் தலைவர்கள் சொல்வார்கள், கட்சியின் பொதுச்செயலாளர் நல்லாட்சி தருவார்” என்றார்.

மேலும் ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க இன்று நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

You May Also Like

More From Author