தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Estimated read time 0 min read

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் 22 இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

அதேபோல, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் மழைபெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author