பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நேபாள கிரிக்கெட் வாரியம்… நடந்தது என்ன..? 

Estimated read time 1 min read

நேபாளம் மற்றும் பூடான் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டியின் போது, பூடான் அணியின் வீராங்கனை ஒருவர் ‘டைம்-அவுட்’ முறையில் ஆட்டமிழந்தது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

ஒரு பேட்டர் ஆட்டமிழந்த பிறகு, அடுத்த பேட்டர் குறிப்பிட்ட நேரத்திற்குள் களத்திற்கு வராத பட்சத்தில், எதிரணி அப்பீல் செய்தால் நடுவரால் ‘டைம்-அவுட்’ முறையில் அவுட் வழங்கப்படலாம் என்பது கிரிக்கெட் விதியாகும். அதன்படி பூடான் வீராங்கனை ஆட்டமிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவத்திற்காக நேபாள கிரிக்கெட் சங்கம் வியாழக்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.

இதுதொடர்பாக நேபாள கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூடான் வீராங்கனையை ‘டைம்-அவுட்’ முறையில் அவுட் செய்தது சர்வதேச கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டதுதான் என்றாலும், கிரிக்கெட் விளையாட்டின் மாண்பு மற்றும் விளையாட்டு உணர்வு என்பது வெறும் எழுதப்பட்ட விதிகளையும் தாண்டியது என்று குறிப்பிட்டுள்ளது. மைதானத்தில் விளையாடும் போது வீராங்கனைகளின் நடத்தை எப்போதும் இந்த விளையாட்டு உணர்வை போற்றும் வகையிலேயே அமைந்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள நேபாள கிரிக்கெட் வாரியம், இந்த எதிர்பாராத நிகழ்விற்காக பூடான் கிரிக்கெட் வாரியத்திடமும், ரசிகர்களிடமும் தங்களது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author