#BREAKING : தவெக அமைச்சரவையில் இடம்பெறுவோர் யார்? யார்? – உத்தேச பட்டியல்..!

Estimated read time 1 min read

தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் வலுவான கூட்டணியுடன் போட்டியிட்ட திமுக 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 5 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தலா 2 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், தவெகவுக்கு ஆட்சியமைக்க தேவையான 118 எம்எல்ஏக்கள் இல்லாததால், பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. இதில், திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் கட்சி, தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை நேற்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, தவெக தலைவர் விஜய், இரு கட்சி அலுவலகங்களுக்கும் சென்று அக்கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இதற்கிடையே, தவெக தலைவர் விஜய், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கடிதம் கொடுத்தார். ஆனால், போதிய எண்ணிக்கை இல்லாமல் ஆளுநர் அழைப்பு விடுப்பதை தவிர்த்து வந்தார்.

தவெகவுக்கு காங்கிரஸ் மற்றும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இருந்தபோதிலும், 116 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருந்தது. இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த 2 நாட்களாக தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இதனால் காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று மாலை 4.30 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தருவதாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு தருவதாக அறிவித்தது. இதனால், தவெக ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைவிட கூடுதலாக 2 இடங்கள் கிடைத்து 120-ஆக அதிகரித்தது.

இதையடுத்து, மாலை 5 மணிக்கு 4வது முறையாக கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க விஜய் திட்டமிட்டிருந்தார்.இதற்காக பட்டினப்பாக்கத்தில் இருந்து விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன், கவர்னர் அர்லேக்கரை சந்திக்க விஜய் மற்றும் கூட்டணி கட்சியினர் புறப்பட்டுச் சென்றனர்.ஆனால், கவர்னர் அர்லேக்கர் இன்று இரவு 7.10 மணிக்கு திருவனந்தபுரம் புறப்பட்டு செல்ல இருப்பதால், விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதனால், ஏமாற்றம் அடைந்த விஜய், காரை பாதியிலேயே திருப்பிக் கொண்டு, மீண்டும் வீடு திரும்பினார். இது, தவெகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சூழலில், கவர்னர் அர்லேக்கரின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டது. மாலை 6.30 மணிக்கு தவெக தலைவர் விஜய்க்கு நேரம் ஒதுக்கித் தரப்பட்டது. இதையடுத்து அவர், தன் கட்சியினர், ஆதரவு தெரிவித்த கட்சிகளின் நிர்வாகிகளுடன், கவர்னரை சந்தித்து, கடிதங்களை ஒப்படைத்தார்.ஆட்சி அமைக்க உரிமையும் கோரினார். அவற்றின் அடிப்படையில் நாளை 10ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. விஜய் உடன் அமைச்சர்கள் 9 பேரும் பதவியேற்கின்றனர்.

பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் கார்கே ஆகியோர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தை சேர்ந்த முன்னணி அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் விழாவில் பங்கேற்கின்றனர்.மேலும் 13ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

தவெக அமைச்சரவையில் இடம் பெறுவோர் உத்தேச பட்டியல் வெளியானது

  • பொது நிர்வாகம் காவல் மற்றும் உள்துறை – விஜய்
  • பொதுப்பணித்துறை – செங்கோட்டையன்
  • மின்சாரத்துறை – CTR நிர்மல் குமார்
  • விளையாட்டு மற்றும் விலக்குதுறை – ஆதவ் அர்ஜுனா
  • நகராட்சி நிர்வாகத்துறை – என்.ஆனந்த்
  • சிறுபான்மை நலத்துறை – முஸ்தபா
  • ஆதி திராவிடர் நலத்துறை – ராஜ்மோகன்
  • பத்திரப்பதிவு துறை – அருண்ராஜ்
  • பள்ளிக்கல்வித்துறை – வெங்கட்ரமணன்
Please follow and like us:

You May Also Like

More From Author