உகாண்டாவுக்குப் பதிலாக, 77 நாடுகள் குழு மற்றும் சீனா அமைப்பின் 2025ஆம் ஆண்டுக்கான தலைமையை ஈராக் 13ஆம் நாள் பொறுப்பேற்றுள்ளது.
சர்வதேச நிலைமை எப்படி மாறினாலும் சீனா வளரும் நாடுகளில் கவனம் செலுத்தும் எண்ணம் எப்போதும் மாறாது. வளரும் நாடுகளின் வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சிக்கு ஆதரவளிக்கும் மன உறுதியும் மாறப்போவதில்லை என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூசொங் தெரிவித்தார்.
புத்தாண்டில், வளரும் நாடுகளுடன் வளர்ச்சி வாய்ப்புகளை சீனா தொடர்ந்து பகிர்ந்துகொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.