சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங், அக்டோபர் 28ஆம் நாள், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 28ஆவது சீன-ஆசியான் தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஆசியான் நாடுகளுடன் இணைந்து வளர்ச்சி நெடுநோக்குத் தொடர்புகளை வலுப்படுத்த சீனா விரும்புகிறது. சீன-ஆசியான் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவுக்கான 2026-2030செயல் திட்டத்தை செயல்படுத்த சீனா முயற்சி செய்யும் என்றார்.
மேலும் இதில் கலந்துகொண்ட ஆசியான் நாடுகளின் தலைவர்கள் கூறும் போது,
சீனாவுடன் சேர்ந்து, தென் சீன கடல் செயல் கோட்பாட்டை உருவாக்க வேண்டும். பிரதேசத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிதானத்திற்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்ற ஆசியான் நாடுகள் பாடுபடும் என்று தெரிவித்தனர்.
