அன்று கடைசி வரிசை.. இன்று சிம்மாசனம்! நேரு ஸ்டேடியத்தில் விஜய் படைக்கும் வரலாறு  

Estimated read time 1 min read

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் இன்று அரியணை ஏறுகிறார்.
சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கட்சிகளின் வெளி ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் விஜய்க்கு, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
தவெக தொண்டர்கள் இந்தத் தருணத்தைக் கோலாகலமாகக் கொண்டாடினாலும், இதே நேரு மைதானத்தில் சரியாக 13 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்க்கு இழைக்கப்பட்ட அந்த அவமரியாதைதான் இன்று பலரது நினைவுகளில் ஒரு ‘மாஸ்’ வரலாற்றுத் திருப்பமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அன்று அநீதி இழைக்கப்பட்ட அதே இடத்தில் இன்று அதிகாரம் கைகூடி வந்திருப்பது காலத்தின் விசித்திரமான கணக்கு என்றுதான் சொல்ல வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author