“விஜய் அரசு பண்றது அப்பட்டமான விஞ்ஞான ஏமாற்றுவேலை.! – EPS

Estimated read time 1 min read

“தவெக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு என்பது வெறும் விஞ்ஞான ஏமாற்றுவேலை; அதிமுகவில் நடக்கும் குதிரை பேரத்தை திசைதிருப்பவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான சாடியுள்ளார்.

முதல்வர் விஜய் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, 14.22 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2,044.46 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. இதில் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், சிறு விவசாயிகளுக்கு 50 சதவீதமும், பெரு விவசாயிகளுக்குத் தலா ரூ.5 ஆயிரமும் தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வன்மையாகக் கண்டித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் அறிக்கையில் நிலத்தை அளவுகோலாகக் கூறிவிட்டு, இப்போது பணத்தை அளவுகோலாக வைத்து விவசாயிகளை அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2021-ல் தனது தலைமையிலான அதிமுக அரசு ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்து 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்ததைச் சுட்டிக்காட்டிய அவர், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் கேவலமான குதிரை பேர அரசியலில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே தவெக அரசு இந்த தில்லுமுல்லு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் காரசாரமாக விவரித்துள்ளார்.

“>

You May Also Like

More From Author