அமெரிக்காவின் அறிவியல் கழகம், பொறியியல் கழகம், மருத்துவவியல் கல்லூரி முதலியவற்றைச் சேர்ந்த சுமார் 1900 உறுப்பினர்கள், உள்ளூர் நேரப்படி, மார்ச் 31ஆம் நாள் வெளிப்படையான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் அறிவியல் இலட்சியம் மீதான பன்முக தாக்குதலை டிரம்ப் அரசு நிறுத்த வேண்டும் என்று அறிவியலாளர்கள் இக்கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அறிவியல் குரல் அடக்கப்பட முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஆராய்ச்சி நிதி தொகையை டிரம்ப் அரசு குறைத்து வருகிறது. ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். பொது மக்கள் அறிவியல் தரவுகளை அறிந்துகொள்ளும் உரிமை நீக்கப்பட்டு வருகிறது. சித்தாந்தக் காரணங்களால் சில ஆய்வாளர்கள் வேலையிலிருந்து விலக வேண்டியுள்ளனர் என்று இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசீலனை அமைப்புமுறையைக் கட்டியமைத்து, அறிவியல் ஆய்வின் சுதந்திரத்தை டிரம்ப் அரசு சீர்குலைந்துள்ளது என்று அறிவியலாளர்கள் இக்கடிதத்தில் மேலும் தெரிவித்தனர்.