முதலமைச்சர் விஜய்க்கு இலங்கை அதிபர் வாழ்த்து  

Estimated read time 0 min read

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்கள் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளதற்கு எனது வாழ்த்துகள். வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின் மூலம் இலங்கையும் தமிழ்நாடும் பல தலைமுறைகளாகப் பிணைக்கப்பட்டுள்ளன” என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக மத்தியில் புதிய அரசு பதவியேற்கும்போது அண்டை நாட்டுத் தலைவர்களிடமிருந்து வாழ்த்துக்கள் வருவது வாடிக்கை என்றாலும், மாநில முதல்வருக்கு வந்துள்ள இந்த வாழ்த்து, இணக்கமான உறவைப் பேணுவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author