தங்கம் விலை இன்று காலை கொஞ்சம் குறைந்தது. சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760க்கு விற்பனையானது.
ஆனால், மதியம் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கம் பவுனுக்கு 720 ரூபாய் அதிகரித்தது. பவுன் 80 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையானது; கிராம் 10 ஆயிரத்து 60 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது, நகை பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.