அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வியாழக்கிழமை (மே 14) 95.8525 என்ற புதிய வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளது.
கடந்த வர்த்தக தினத்தில் நிலவிய 95.7950 என்ற முந்தைய சாதனையை முறியடித்து, ரூபாய் மதிப்பு 0.1 சதவீதம் பலவீனமடைந்துள்ளது.
இந்த வாரம் செவ்வாய் முதல் வியாழன் வரை ஒவ்வொரு வர்த்தக அமர்விலும் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவது முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையால் இந்தியாவின் வெளிப்புறப் பொருளாதாரச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.
வரலாற்றில் இல்லாத புதிய வீழ்ச்சி; ரூபாய் மதிப்பு 95.85 ஆகக் குறைவு
