கேரளாவின் புதிய முதல்வர் வி.டி.சதீசன்! 10 நாள் இழுபறிக்கு பின் காங்கிரஸ் அறிவிப்பு  ​

Estimated read time 1 min read

கேரள அரசியலில் நிலவி வந்த பத்து நாள் நீணட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் மேலிடம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த மே 4-ம் தேதி வெளியான கேரள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF), இடதுசாரிகளின் பத்தாண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து அமோக வெற்றி பெற்றது.
இருப்பினும், முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் ஏற்பட்ட இழுபறி காரணமாகப் புதிய அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) கேரள மாநிலப் பொறுப்பாளர் தீபா தாஸ்முன்ஷி, டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author