தமிழகத்தில் மினி பஸ்களை மீண்டும் இயக்க அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
மேலும் எந்தெந்த வழித்தடங்களில் மினி பஸ் சேவைகளுக்கான அனுமதி வழங்குவது என்பது குறித்து RTO-க்கள் முடிவு செய்யலாம்.அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படும். அனைத்து மினி பேருந்துகளிலும் GPS வசதி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை ஜூலை 14ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.