தமிழகத்தில் நெல் மற்றும் அரிசி இருப்புக்கு புதிய உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் அரசிதழில் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு 31.01.2027 வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வியாபாரி (Wholesaler): ஒவ்வொரு பருப்பு வகைக்கும் (துவரம் / உளுந்து) 200 MT (மெட்ரிக் டன்) மட்டும் வைத்திருக்க அனுமதி
சில்லறை வியாபாரி (Retailer): ஒவ்வொரு வகைக்கும் 5 MT மட்டும் வைத்திருக்க அனுமதி
பெரிய சங்கிலி கடைகள் (Big Chain Retail): ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு பருப்புக்கு 5 MT, அவர்களின் கிடங்கில் (Depot) ஒவ்வொரு பருப்புக்கும் 200 MT வைத்திருக்க அனுமதி
மில் (Miller): கடைசி 3 மாத உற்பத்தி அல்லது வருடாந்திர நிறுவப்பட்ட திறனில் 25% – இதில் எது அதிகமோ அது!
இறக்குமதியாளர் (Importer): சுங்க அனுமதி (Custom Clearance) பெற்ற நாளில் இருந்து 45 நாட்களுக்கு மேல் இறக்குமதி ஸ்டாக்கை வைத்திருக்க கூடாது
அரிசி / நெல்லுக்கான ஸ்டாக் லிமிட்:
– Wholesaler: 2000 MT நெல் / அரிசி!*
– Retailer: ஒரு கடைக்கு 8 MT மட்டும்!
– Big Chain Retail Shop: ஒரு கடைக்கு 8 MT வரை, மொத்தம் (8 x மொத்த கடைகளின் எண்ணிக்கை) MT-க்கு மேல் கூடாது!
– Miller: ஒரு மாத உற்பத்தி திறனுக்கு மேல் வைக்க கூடாது!*
– Importer: 45 நாட்களுக்கு மேல் ஸ்டாக் வைக்க கூடாது!*
– Processor: 60% of Monthly Installed Capacity (MIC) x ஜனவரி 2027 வரை உள்ள மீத மாதங்கள்!
Essential Commodities Act 1955, Section 3-ன் படி, துவரம் பருப்பு, உளுந்து, நெல், அரிசி விநியோகத்தை சீராக பராமரிக்கவும், அனைவருக்கும் நியாயமான விலையில் கிடைக்கவும், பதுக்கலை தடுக்கவும் மத்திய அரசின் ஒப்புதலுடன் தமிழக கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
