சீனாவின் தொழிற்துறை நிறுவனங்களின் அலுவல் வருமானம் அதிகரிப்பு

சீனத் தேசிய புள்ளி விவரப் பணியகம் அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இவ்வாண்டின் துவக்கம் முதல், சந்தை தேவை தொடர்ந்து மீட்சியடைவதுடன், சீனாவின் தொழிற்துறை உற்பத்தியும் தொழிற்துறை நிறுவனங்களின் அலுவல் வருமானமும் விரைவாக அதிகரித்து வருகின்றன.


இவ்வாண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரியில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் அலுவல் வருமானம் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.

தொழில் நிறுவனங்களின் அலுவல் வருமானத்தின் குறிப்பிடத்தக்க அளவிலான அதிகரிப்பு, லாப அதிகரிப்புக்கு சாதகமான நிலைமையை வழங்கியுள்ளது.


தொழிற்துறை பொருளாதாரத்தின் தொடர்ச்சியான சீரான மீட்சியுடன், வேறுபட்ட அளவிலான தொழில் நிறுவனங்களின் உயிராற்றல் வலுப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author