சீனாவின் மீதான சுங்க வரி விதிப்பை மீண்டும் தீவிரமாக்கும் என்று அமெரிக்கா 7ஆம் நாள் தெரிவித்தது. இதன் மூலம் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உலகம் தெளிவாக பார்க்கலாம்.
அமெரிக்கா சீனாவின் மீது சுங்க வரி விதிப்பு ஏற்படுத்திய பிறகு, சீனா பதில் நடவடிக்கை மேற்கொண்டது. பலதரப்பு வர்த்தக அமைப்பு முறைக்கு அமெரிக்கா திரும்புவது சீனாவின் நோக்கமாகும். அமெரிக்கா தவறான செயல்களில் ஊன்றி நின்றால், சீனா கடைசி வரை பதில் அளிக்கும்.
குறுகிய காலத்தில் பார்த்தால், அடுத்த ஆண்டு நடைபெறும் இடைகால தேர்தலுக்குச் சேவை புரிவது அமெரிக்க அரசு சுங்க வரி வசூலிக்கும் நோக்கமாகும். நீண்டகாலமாக பார்த்தால், கடந்த சில பத்து ஆண்டுகளில் உருவாகிய உலகமயமாக்கத்தை அழிப்பது அமெரிக்காவின் நோக்கமாகும்.
அமெரிக்காவின் சுங்க வரி விதிப்பு சீனாவின் பொருளாதாரத்துக்கு தலைகீழான பாதிப்பை ஏற்படுத்தாது. சீனாவின் பொருளாதாரம் பெருங்கடல் போன்றது. சீனா பல கொள்கைகளை வெளியிட்டு, இதைச் சமாளிக்க முடியும். உலக பொருளாதார அதிகரிப்பின் உந்து விசையாக மாறும் திறன் சீனாவுக்கு உள்ளது.
சீனாவின் மீதான சுங்க வரி வசூலிக்கும் அமெரிக்கா இதனால் பாதிக்கப்படும். அமெரிக்கா, உலக நலன்களை மீறி, சொந்த நலனுக்குச் சேவை அளித்து வருகின்றது. உலகம் முழுவதும் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
