ஏற்கனவே கொரோனா தொற்று பரப்பிய அதே சீனாவில் மற்றுமொரு அரியவகை தொற்று ஏற்பட்டுள்ளது.
ஹாங்காங்கைச் சேர்ந்த 37 வயதான ஒருவருக்கு, அரிதான, ஆபத்தான பி வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குரங்குகளுடன் ஏற்பட்ட தகராறில் இந்த தொற்று ஏற்பட்டது. இதுபோன்ற தொற்று மனிதனுக்கு ஏற்பட்டது சீன பிராந்தியத்தில் இதுவே முதல்முறை.
சுகாதார அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்படி, நோயாளி தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹெர்பெஸ்வைரஸ் சிமியே என்றும் அழைக்கப்படும் பி வைரஸ், குரங்குகளின் ஒரு இனமான மக்காக்களிடையே பரவலாக உள்ளது.
விலங்குகளில், இது பொதுவாக வாயை சுற்றி குளிர் புண்கள் ஏற்படுத்தும். இருப்பினும், மனிதர்களை தாக்கும்போது, மூளையழற்சி அல்லது மூளை வீக்கம் உட்பட நரம்பு மண்டலத்தில் கடும்சேதத்தை ஏற்படுத்தும்.