ஷாங்காய் விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் இந்திய பெண்ணை துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இங்கிலாந்தை சேர்ந்த இந்திய குடிமகளானன பெமா வாங்ஜோம் தோங்டாக் என்ற அந்தப் பெண், பாதுகாப்பு சோதனைகளின் போது தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அருணாச்சலத்தை சீனாவின் ஒரு பகுதியாக சீன அதிகாரிகள் கருதியதால், தனது பாஸ்போர்ட் செல்லாது என்று சீன அதிகாரிகள் கூறியதாகவும் குற்றம் சாட்டினார்.
இது நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்கு செல்லும் போது 18 மணி நேர சோதனைக்கு வழிவகுத்தது என்று அவர் கூறினார்.
ஷாங்காய் விமான நிலையத்தில் அருணாச்சல பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரம்; மறுக்கும் சீனா
