இருமொழி கொள்கை, பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  

Estimated read time 1 min read

தமிழகத்தில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர்.
இந்தத் தேர்வின் முடிவுகள், திட்டமிட்டபடி நாளைய தினம் வெளியாக உள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ஆசிரியர்கள் மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்துப் பேசினார்.
“மாணவ சிங்கக் குட்டிகள் எதிர்காலத்தைக் காட்டும் நவீன சிப்பி; ஒரு நாட்டின் பொக்கிஷமே அவர்கள்தான்” எனக் குறிப்பிட்ட அமைச்சர், வகுப்பறையில் ஆசிரியர்கள் குறைவாகப் பேசி, மாணவர்களை அதிகமாகப் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், ‘Education is Celebration’ என்ற தாரக மந்திரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

More From Author