தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்திரப்பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவின் படி, சொத்தைப் பத்திரப் பதிவு செய்யும்போது, அதன் அசல் ஆவணங்களைக் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.
ஒருவேளை அந்தச் சொத்து அடமானத்தில் இருந்தால், அடமானம் பெற்ற நபரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று, அதனை பத்திரப் பதிவின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
சொத்தின் அசல் ஆவணம் தொலைந்துவிட்டது என்றால், அதுகுறித்து காவல்துறையில் புகாரளித்து, ‘ஆவணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்கிற சான்றிதழைப் பெற வேண்டும்.
இத்தனை விதிகளுடன், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்திரப்பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார்.
