இணையத்தில் சில விலங்குகள் அவற்றின் வித்தியாசமான தோற்றத்தால் வைரலாவது வழக்கம். அந்த வகையில், வங்காளதேசத்தில் வளர்க்கப்படும் இரண்டு எருமை மாடுகள் தங்களின் தனித்துவமான தோற்றம் மற்றும் பெயர்களால் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் ஈர்த்துள்ளன.
டாக்காவில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் சுமார் 700 கிலோ எடை கொண்ட அல்பினோ வகை எருமையின் தலைமுடி அமைப்பு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சிகை அலங்காரத்தை ஒத்திருப்பதால் அதற்கு ‘டொனால்டு டிரம்ப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதேபோல், நாராயணகஞ்ச் பகுதியில் உள்ள மற்றொரு பண்ணையில் வளர்க்கப்படும் 750 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட எருமைக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த எருமைகளின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
இதற்கிடையில், இந்த வைரல் எருமையின் தோற்றத்தைக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை ஈரான் நாடு கிண்டல் செய்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்றை ஈரான் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அதில், “பாவம்..! டொனால்டு டிரம்புடன் ஒப்பிட்டதால் அந்த வங்கதேச எருமை வருத்தமடைந்துள்ளது” என்றும், “டிரம்பை ஒத்த தோற்றமுடைய அந்த எருமையைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டதால், அதற்குப் பசியே எடுக்கவில்லை” என்றும் நகைச்சுவையாகக் பதிவிட்டுள்ளது.
Poor thing!
Bangladeshi buffalo upset by comparisons to Donald Trump
RT: A Bangladeshi buffalo that resembles Trump has lost its appetite after people flocked to see him. pic.twitter.com/6BnayVaJrY
— Iran in Russia (@IranembinRussia) May 22, 2026
“>
சர்வதேச அளவில் ட்ரம்பை விமர்சிக்கும் நோக்கில் ஈரான் வெளியிட்டுள்ள இந்த சமூக வலைதளப் பதிவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

