அமெரிக்க வணிகத் துறை அமைச்சரின் அறிவு குறைவு

 

தற்போதைய வாகனங்கள், சக்கரம் கொண்ட ஐபோன் தான். கற்பனை செய்ய வேண்டுமானால், பத்து இலட்சக்கணக்கான வாகனங்கள், அமெரிக்காவின் பாதையில் ஓடுகின்றது. ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நிமிடத்திலும் பத்து இலட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் தொடர்புடைய தரவுகளைத் திரட்டி, சீனாவின் தலைநகர் பெய்ஜிங் மாநகருக்கு அனுப்பி வருகின்றன என்று அண்மையில் அமெரிக்க வணிகத் துறை அமைச்சர் ஜினா ரெயிமொண்டோ பித்தலாட்டமாகக் கூறினார்.

உள்ளபடியாகவும் கூறினால், சீனாவின் வாகனங்கள் மீது அமெரிக்கா உயர் இறக்குமதி சுங்க வரி வசூலித்ததால் அமெரிக்காவில் சீனாவின் புதிய எரியாற்றல் வாகனங்கள் குறைவாக காணப்படுகின்றது. இவ்வாண்டின் பிப்ரவரி திங்கள் இறுதி, அமெரிக்க அரசு வெளியிட்ட பொது அறிக்கையின்படி, சீனாவால் தயாரிக்கப்பட்ட இணைக்கப்பட்ட வாகனங்கள் மீது, தேசிய பாதுகாப்பு அபாயம் குறித்து புலனாய்வு செய்ய வேண்டும். சீனாவின் மின்னாற்றல் வாகனங்கள் மீதான பகைமையை விரிவாக்குவதில், அமெரிக்க சமூகம் தூண்டி விடப்படுவதற்கு பொருளாதார காரணிகளும் அரசியல் உள்நோக்கமும் உண்டு.

பொருளாதாரத்தின் உலகமயமாக்கம் மென்மேலும் விரிவாகிய தற்போதைய உலகத்தில், தாராளமாக போட்டியிடுவது என்பது அடிப்படை கொள்கையாகும். பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத் தொடர்புடையது. மற்ற நாடுகளைத் திணிப்பதன் மூலம், சொந்த நாடுகளின் வளர்ச்சியை வலிமைப்படுத்த முடியாது என்பது திண்ணம். 

Please follow and like us:

You May Also Like

More From Author