”இதற்கு மேலும் ஆதாரம் வேணுமா?” திமுக, அதிமுக ‘கூட்டணி ஆட்சி’ திட்டம்…. வரிசையாக அம்பலப்படுத்தும் கூட்டணி கட்சிகள்….!! 

Estimated read time 1 min read

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு ‘மெகா அதிரடி’ திரைமறைவு அரசியல் தற்போது அடுத்தடுத்து அம்பலமாகி ஒட்டுமொத்தக் களத்தையும் அதிரவைத்துள்ளது. திமு‌கவும் அதிமுகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து உள்ளுக்குள் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திய விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

முதலில் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வர, அதைத் தொடர்ந்து அதிமுகவின் சி.வி.சண்முகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என அடுத்தடுத்து முக்கியத் தலைவர்கள் இந்த ரகசிய ‘டீலிங்கை’ அம்பலப்படுத்தி அதிர்வலைகளை உருவாக்கினர்.

இந்த வரிசையில் தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் காதர் மொகிதீனும், “திமுக – அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க உள்ளுக்குள் பேசப்பட்டது” எனப் பகிரங்கமாகப் போட்டு உடைத்து, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியுள்ளார்.

அடுத்தடுத்துப் பல கூட்டணிக் கட்சித் தலைவர்களே இந்த ரகசிய உடன்பாட்டைத் தொடர்ந்து எக்ஸ்போஸ் செய்து வரும் நிலையில், தமிழக அரசியல் களம் தற்போது உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.

“இத்தனை ஆதாரபூர்வமான வாக்குமூலங்களுக்குப் பிறகும், திமுக – அதிமுக கூட்டணி முயற்சி செய்ததை இதற்கு மேல் யார் வந்து சொன்னால் நீங்கள் நம்பப் போகிறீர்கள்?” என்ற பலத்த கேள்வி இப்போது அரசியல் வட்டாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author