இந்திய பங்குச்சந்தையைக் காப்பாற்றிய நடுத்தர மக்களின் SIP!  

Estimated read time 1 min read

உலகளாவிய போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால், 2026 மார்ச் காலாண்டில் இந்திய குடும்பங்களின் பங்குச் சந்தை சொத்து மதிப்பில் ரூ.12.6 லட்சம் கோடி துடைத்தெறியப்பட்டுள்ளது.
என்எஸ்இ அமைப்பின் சமீபத்திய மார்க்கெட் பல்ஸ் அறிக்கையின்படி, சமீப காலங்களில் இந்திய முதலீட்டாளர்கள் சந்தித்த மிக மோசமான சரிவுகளில் ஒன்றாக இந்த காலாண்டு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இத்தகைய கடுமையான சரிவுக்கு மத்தியிலும், உள்நாட்டு முதலீடுகள் இந்திய பங்குச் சந்தையை முற்றிலும் முடங்கிவிடாமல் தடுத்து நிறுத்தும் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி உறிஞ்சியாக (Shock absorber) தற்பொழுது மாறியுள்ளது.

You May Also Like

More From Author