திருப்பூர் : ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Estimated read time 1 min read

திருப்பூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேரோட்டத்தை ஒட்டி ஸ்ரீதேவி பூமிதேவி தாயார்களுடன் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கருட சேவை சாதித்து அருள்பாலித்தார். தொடர்ந்து 8-ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக வீரராகவ பெருமாளுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் தேவியர்களுடன் முத்தங்கி ராஜ அலங்காரத்தில் வீரராகவ பெருமாள் எழுந்தருளினார்.

இதையடுத்து தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்த எனப் பக்தி முழக்கமிட்டு வடம்பிடித்து இழுத்தனர். தேரின் முன்பு பக்தர்கள் கும்மியாட்டம், கோலாட்டம், சலங்கை ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

You May Also Like

More From Author