அரசியல் தலைவர்களுக்காகக் ஆன்மீக மரபுகளை மாற்றக் கூடாது ஐகோர்ட்….!! 

Estimated read time 1 min read

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். அப்போது, அமைச்சரின் வருகைக்காகக் கோவிலின் வழக்கமான நடை அடைக்கும் நேரம் தாழ்த்தப்பட்டு, தாமதமாக நடை அடைக்கப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. விதியை மீறி அமைச்சருக்காகக் கடவுளையும், பக்தர்களையும் காத்திருக்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கோவில் நிர்வாகத்திற்கும், விஐபி-க்களுக்கும் அதிரடியான பலத்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். “எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களுக்காகக் கடவுள் ஒருபோதும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை” என்று நீதிமன்றம் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளது. விஐபி-க்கள் யாராக இருந்தாலும் கோவிலின் ஆகம விதிகளையும், நடை திறப்பு மற்றும் அடைப்பு நேரங்களையும் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்றும், அரசியல் தலைவர்களுக்காகக் ஆன்மீக மரபுகளை மாற்றக் கூடாது என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

You May Also Like

More From Author