விரைவில் மாறப்போகும் இந்திய பணம்! காகித நோட்டுகளுக்குப் பதிலாக ‘பிளாஸ்டிக் நோட்டுகள்’ – ஆர்பிஐ அதிரடி திட்டம்!  

Estimated read time 0 min read

இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளதாலும், ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான அழுக்கடைந்த நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாலும் ரிசர்வ் வங்கி புதிய முடிவை எடுத்துள்ளது.
இதன்படி, ஒரு தசாப்தத்திற்கு முன்பு திட்டமிடப்பட்டு கைவிடப்பட்ட பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது குறித்து ஆர்பிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
மும்பை மற்றும் பாட்னாவில் நடந்த ரிசர்வ் வங்கியின் கடந்த இரு வாரியக் கூட்டங்களில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதை அடுத்து, விரைவில் இதற்கான பைலட் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.

You May Also Like

More From Author