எதிர்கால தொழிற்துறையின் வளர்ச்சி குறித்த ஷி ச்சின்பிங்கின் கட்டுரை

தொலைநோக்கு திட்டம் மற்றும் எதிர்கால தொழிற்துறையின் வளர்ச்சி குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங்கின் கட்டுரை ஒன்று, ஜுன் முதல் நாள் ஜியூ சி இதழில் வெளியிடப்படவுள்ளது.

அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் தொழிற்துறையின் வலுவான இடங்களைப் பிடிப்பது, வளர்ச்சியின் முன்னுரிமையைக் கைபற்றுவது, புதிய உயர் தர உற்பத்தி திறனை வளர்ப்பது, நவீனமயமாக்க தொழிற்துறை அமைப்பு முறையைக் கட்டியமைப்பது, பொது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது, மனிதரின் பன்முக வளர்ச்சியையும் சமூகத்தின் பன்முக முன்னேற்றத்தையும் வலுப்படுத்துவது ஆகியவற்றுக்கு, எதிர்கால தொழிற்துறையை வளர்ப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. வல்லரசு கட்டுமானம் மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சி என்ற தொலைநோக்கு கோணங்களிலிருந்து தொடங்கி, சீனாவின் எதிர்கால தொழிற்துறையின் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author