சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் நவம்பர் 4 முதல் 6ஆம் நாள் வரை ஹுபெய் மாநிலத்தின் சியெள கான், சியன் நிங் மற்றும் வூ ஹான் நகரங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். உள்ளூர் அருங்காட்சியகம், கிராமங்கள், அறிவியல் தொழில் நுட்பம், தொழில் புத்தாக்க மேடை ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.
6ஆம் நாள் முற்பகல் அவர் ஹுபெய் மாநிலத்தின் கட்சிக்குழு மற்றும் அரசு வழங்கிய பணியறிக்கையைக் கேட்டறிந்து, இம்மாநிலத்தின் பல்வேறு பணிகள் பெற்றுள்ள சாதனைகளைப் பாராட்டியதோடு, அடுத்த கட்ட பணிகள் குறித்து உத்தரவுகளை விடுத்தார்.
அவர் கூறுகையில், ஹுபெய் மாநிலத்தின் அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க ஆற்றல் வலிமை மிக்கது. அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தையும் தொழில் புத்தாக்கத்தையும் முன்னேற்றுவதற்கு ஹுபெய் பாடுபட வேண்டும். சீர்திருத்தத்தை பன்முகங்களிலும் ஆழமாக்குவதிலும், உயர் நிலையுடைய திறப்பை விரிவாக்குவதில் ஹுபெய் ஆராய்ச்சி செய்ய வேண்டும். நகரங்கள் மற்றும் கிராமங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியிலும், கிராமங்களின் பன்முக மறுமலர்ச்சியிலும் ஹுபெய் முன்முயற்சி செய்ய வேண்டும். வூ ஹான் நகர வட்டத்தை மையமாக கொண்டு, யாங் சி ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள நகரங்களின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும். பண்பாட்டு வளங்களின் பாதுகாப்பை ஹுபெய் வலுப்படுத்தி, பண்பாட்டின் புத்தாக்க வளர்ச்சியை முன்னேற்றி, பண்பாட்டு சுற்றுலா துறையை முக்கிய முதுகெலும்புத் துறையாக வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.