சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் டிசம்பர் 30ஆம் நாள் கூறுகையில், வனுவாட்டு நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின், சீனா அந்நாட்டுக்கு ஆக்கமுடன் உதவியளித்துள்ளது.
வனுவாட்டு அரசின் கோரிக்கையின்படி, சீன நிலநடுக்கப் பணியகத்தைச் சேர்ந்த 4 நிபுணர்கள் 30ஆம் நாள் அந்நாட்டின் தலைநகரைச் சென்றடைந்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திலுள்ள கட்டிடக் கட்டமைப்பு, பாதுகாப்பு மதிப்பீடு உள்ளிட்ட சோதனைப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர் என்றார்.
அடுத்த கட்டத்தில், பாதிக்கப்பட்ட பிரதேசத்திலுள்ள நிலைமை மற்றும் தேவைக்கிணங்க, வனுவாட்டு நாட்டுக்குத் தொடர்ந்து உதவியளிக்க சீன அரசு விரும்புவதாகவும் மாவ்நிங் தெரிவித்தார்.