வசந்த விழாவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 23ஆம் நாள் வியாழக்கிழமை லியாவோனிங் மாகாணத்தின் தலைநகர் ஷென்யாங்கில் பயணம் மேற்கொண்டார்.
அப்போது, ஷென்யாங்கிலுள்ள உணவுச் சந்தை மற்றும் குடியிருப்பு ஆகிய இடங்களில் களஆய்வு மேற்கொண்ட ஷிச்சின்பிங், வசந்த விழா நாட்களில் சந்தை விநியோகம், பொதுச் சேவை மேம்பாடு, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் காணப்படும் முன்னேற்றம் ஆகிய விவரங்களைக் கேட்டு அறிந்து கொண்டார்.