இன்று (ஜூன் 1, 2026) திங்கள் கிழமை முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை (யுபிஐ) மற்றும் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோக முறையில் புதிய விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.
கூகுள் பே, போன்பே போன்ற ஆப்ஸ்களில் அதிக தொகை பரிவர்த்தனைகளுக்கு இனி பயோமெட்ரிக் கட்டாயமாக்கப்படுவதோடு, பணம் அனுப்பும் முன் பெறுநரின் அசல் பெயரைக் காட்டும் வசதியும் அறிமுகமாகிறது.
குழாய் எரிவாயு (பிஎன்ஜி) இணைப்பு பெற்றவர்கள் எல்பிஜி சிலிண்டரைத் தொடரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், சிலிண்டர் ரீஃபில் செய்வதற்கான கால அவகாசமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1, 2026 முதல் யுபிஐ மற்றும் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தில் புதிய விதிகள் அமல்!
