துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: விமான சேவைகள் பாதிப்பு  

Estimated read time 1 min read

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) மிக அருகாமையில் இன்று காலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் அங்கிருந்த ஒரு எரிபொருள் கிடங்கு தீ பற்றி எரியத் தொடங்கியதை அடுத்து, பாதுகாப்பு கருதி விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
விமான நிலையத்தின் எல்லைப்பகுதியில் உள்ள எரிபொருள் தொட்டி ஒன்றைக் குறிவைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் துபாய் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த சிவில் டிஃபென்ஸ் குழுவினர், தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author