மியான்மரில் பயங்கர வெடி விபத்து – குழந்தைகைள் உள்ளிட்ட 45 பேர் பலி!

Estimated read time 1 min read

மியான்மரில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்த நிலையில், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில் அந்நாட்டின் ஷஹன் மாகாணம், நாம்காம் நகரில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதியில், சுரங்கப் பணிகளுக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் திடீரென வெடித்ததாக தெரிகிறது.

இதனால் அருகாமையில் உள்ள பல கட்டடங்களும், வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ராணுவம் மூலம் வெடி விபத்து தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You May Also Like

More From Author