வெட்கக்கேடு; ஆயுத விநியோகத்தை நிறுத்தும் பிரான்ஸ் அறிவிப்பிற்கு இஸ்ரேல் பிரதமர் காட்டம்  

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் காசாவில் பயன்படுத்துவதற்காக, இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு சனிக்கிழமை (அக்டோபர் 5) அழைப்பு விடுத்தார்.

இதற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் எதிர்வினையாற்றியுள்ளார்.
முன்னதாக, லெபனானில் தரைவழியாக இஸ்ரேல் ராணுவம் படைகளை அனுப்பும் முடிவிற்கும் நெதன்யாகுவை மேக்ரான் கடுமையாக விமர்சித்தார்.

அவர் இதுகுறித்து பிரான்ஸ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இன்று, நாம் ஒரு அரசியல் தீர்வுக்குத் திரும்புவதே முன்னுரிமை என்று நான் நினைக்கிறேன்.

காசாவில் போரிடுவதற்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துகிறோம்.” என்று கூறினார்.
செவ்வாயன்று பதிவு செய்யப்பட்ட இந்த நேர்காணலின் போது பிரான்ஸ் தற்போது எதையும் வழங்கவில்லை என்று அவர் கூறினார்.

You May Also Like

More From Author