கோவை, நீலகிரி மக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை!

Estimated read time 0 min read

தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

அதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 7 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

You May Also Like

More From Author