இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தங்களின் விசா காலத்தை நீட்டிப்பதற்கான விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
‘குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் விதிகள், 2025’-ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய திருத்தங்கள், வெளிநாட்டினரைக் கண்காணிக்கும் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவதையும், இமிக்ரேஷன் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
பழைய விதிகளின்படி, 180 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான விசா காலத்தைக் கொண்ட வெளிநாட்டினர், இந்தியா வந்து 180 நாட்கள் முடிந்த பிறகு அடுத்த 14 நாட்களுக்குள் தங்களைப் பதிவு (Registration) செய்ய அனுமதி இருந்தது.
ஆனால், தற்போது திருத்தப்பட்டுள்ள ‘விதி 12’-ன் படி, வெளிநாட்டினர் தங்களின் 180 நாட்கள் விசா காலம் முடிவடைவதற்கு முன்பாகவே பதிவு செய்ய வேண்டும் என காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது.
இந்திய விசா விதிமுறைகளில் மாற்றம்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய திருத்தங்கள்
