கேரளாவில் பரபரப்பு..! ரயிலை கவிழ்க்க சதி..?

Estimated read time 1 min read

கேரளாவின் பாலக்காடு அருகே ஒட்டப்பாலம் மற்றும் சொரானூர் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இரும்புத் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலைக் கவிழ்க்க நடந்த இந்த சதி முயற்சியில், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை ரயில்வே போலீசார் அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைபோலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலம் மற்றும் ஷெரனூர் (Shoranur) இடையே ரயில் தண்டவாளத்தில் கான்கிரீட் சிலைகள், இரும்புத் துண்டுகள் மற்றும் சிமெண்ட் சாக்குகள் வைக்கப்பட்டு ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டுள்ளதா

என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலம் – ஷெரனூர் இடையேயான ரயில் பாதை (மன்னாநூர் மற்றும் கரகடு ‘ஏ’ கேபின் உள்ளிட்ட 3 இடங்கள்).தண்டவாளத்தின் மீது கான்கிரீட் ஸ்லாப் (Concrete slab), இரும்புத் துண்டு மற்றும் திடப்படுத்தப்பட்ட சிமெண்ட் கொண்ட சாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுதொடர்பாக பீகாரைச் சேர்ந்த ஷுக் லால் மரியா

(Shuk Lal Mariya) என்ற நபரை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலை 10.30 மணிக்கும் 11.30 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், ரயில்கள் வருவதற்கு முன்பாக இவையைக் கண்டறிந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author