அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கட்டாயம்; தமிழக அரசு அறிவிப்பு

Estimated read time 0 min read

திருமணமாகும் இளம்பெண்கள் அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் பிறந்து திருமணமாகும் இளம்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்தைச் செயல்படுத்த முதற்கட்டமாக 812 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாதவர்கள், முதலில் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும்,

ஆதார் கிடைக்கும் வரை குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author